World

கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்காக ஆமை இரத்தத்தை குடித்த குழந்தை மரணம்

டொமினிக்கன் குடியரசில் கொரோனாவிலிருந்து காப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு ஆமை இரத்தத்தை கொடுத்த மந்திரவாதி ஒருவர்.

ஆமை இரத்தத்தைக் குடித்தவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

ஆனால், மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அது இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

குழந்தையின் ஏழு வயது அக்கா மற்றும் பெற்றோர்கள் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுபோல் கொரோனாவிலிருந்து காப்பாற்ற என்று கூறி, கண்டதையும் குடித்து விட்டு மருத்துவமனைக்கு வருவோர் கடைசியில் பரிதாபமாக உயிரைத்தான் விடுகிறார்கள் என்கிறார் மருத்துவர் ஒருவர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading