World

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைதவர் மீண்டும் தொற்றியதால் இறந்துள்ளனர்

இந்தியாவில் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸினால் 5-வதாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றாக கூடுவதை தவிர்க்கவும் அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் 22ம் திகதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ட்ரி கார்லி (Andri Carly) என்கிற நபர் சிகிச்சைப் பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

மேலும் இந்த நபர் கொரோனாவில் இருந்து குணமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் இவருக்கு கொரோனா தொற்று கடுமையாக பாதித்தால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading