Local

கொரோனாவுக்கு 1.15 இலட்சம் சுகாதார ஊழியர்கள் உயிரிழப்பு!

உலகம் முழுவதிலும் பரவி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சுஸர்லாந்தில் பேசிய WHO தலைவர் டெட்ரோஸ் அதானம், கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்களின் தியாகம் போற்றத்தக்கது என்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் பணியில் 1 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களின் இன்உயிரை இழந்திருப்பதாக அதானம் குறிப்பிட்டார். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 2021ம் ஆண்டு தொற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதானம் கூறியதாவது, உலகமே சுமார் 18 மாதங்களாக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது என்று தான் கூற வேண்டும் என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading