Local

கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு இரண்டாமிடம்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சீன முதன்மை புலனாய்வு ஆய்வு நிறுவனமான ´இகாயி´ நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தமை, பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பியமை மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

108 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சீனாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சீனா, இலங்கை, தென்கொரியா, மியன்மார், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் கானா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading