Features

கொரோனா காலத்தில் ஆணுறைகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தொற்று காலத்தில் உலகம் முழுவதும் ஆணுறைகள் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக நிக்கெய் ஆசியா செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது, மூன்றாவது அலை, நான்காவது அலை என கொரோனா வைரசின் மாறுபாடுகளால் உலக நாடுகள் சிக்கித்தவித்து வருகின்றன.

இதிலிருந்து தங்களது நாட்டு மக்களை பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை அரசாங்கம் முடக்கிவிட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வணிக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று, ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திலும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.

உலகளவில் ஆணுறை பயன்பாடு குறைந்து விற்பனை சுமார் 40 சதவிகிதம் வீழ்ந்துள்ளதாக நிக்கெய் ஆசியா செய்து வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான கேடக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கைத்,

ஆணுறை பயன்பாடு குறைந்ததற்குக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் நலனுக்கான மையங்களும் மூடப்பட்டிருந்ததும் ஒரு காரணம் எனக் கூறியுள்ளார்.

சுமார் 140 நாடுகளுக்கு ஆணுறைகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் `டியூரெக்ஸ்’ என்ற பெயரில் ஆணுறைகளை விற்பனை செய்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 18 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading