World

கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வித மன அழுத்தத்துடனே இருப்பதாக அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி ,ஒரே நேரத்தில் கூட்டத்தை பார்த்தாலும் அழுகிறார்கள், வீதிகளில் கேட்கும் அதிக சப்தங்களையும் கேட்டு அஞ்சுகிறார்கள் என பெற்றோர் தெரிவிக்கிறார்கள்.

கொரோனாவால் பெரியவர்கள் ஒரு வித மன அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில் அந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த குழந்தைகளுக்கு தற்போது ஒரு வயதான போதிலும் வீட்டு “கேட்” முன்பு யாராவது நின்றால் அவர்களை கண்டு அஞ்சி அழுவதாக அவரது தாய் தெரிவிக்கிறார். அது போல் வீதிகளில் ஏற்படும் அதிக சப்தத்தை கேட்டும் குழந்தை பயப்படுவதாகவும் கூறுகிறார்.

அதன்படி ,இதற்கு காரணம் கொரோனா அச்சுறுத்தலால் குழந்தை பிறந்தவுடன் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் குழந்தையை பார்க்க அனுமதித்தது, வெளியே எங்கும் அழைத்து செல்லாமல் இருந்தமையே காரணம்.

அதனால் ,குழந்தை பிறந்து ஓராண்டு ஆன போதிலும் அக்குழந்தை சமூகத்தை கண்டு அஞ்சுகிறது. வயிற்றில் இருந்த போதும் பிறந்த போதும் ஊரடங்கால் எந்த வித சப்தமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகளால் வீதிகளில் ஏற்படும் சப்தத்தையும் அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading