World

கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் தப்பி ஓட்டம்

இந்தியாவின் ஜம்மு மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் தப்பியோடியும் மற்றொருவர் உறவினர்களால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிய 2 பேர் ஜம்முவில் ஜி.எம்.சி.எச். மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியிருந்த நிலையில், மற்றொருவர் உறவினர்களால் வலுக் கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து இவ்வாறு மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுபட்ட இருவரையும் மீண்டும் அழைத்துவந்து அவர்களது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பூணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading