LocalWorld

கொரோனா தொடர்பில் சீனா நடத்திய நாடகம் அம்பலம்!

கொரோனா பெருந்தொற்று சீனா நடத்திய உயிரி தீவிரவாத தாக்குதல் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் இந்த தகவலை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட்ட வூகான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த சாவோ ஷாவோ என்ற அந்த ஆராய்ச்சியாளர்,

“சர்வதேச செய்தியாளர் சங்க உறுப்பினர் ஜெனிஃபர் என்பவருக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ், சீனாவின் உயிரி ஆயுதமாகும்.

கொரோனா பரவத் தொடங்கிய 2019-ம் ஆண்டில், மேலதிகாரி ஒருவர் கொரோனா வைரசின் 4 திரிபுகளை தனது நண்பர்களிடம் கொடுத்து, அதில் எது அனைத்து உயிரினங்களிலும் எளிதாக பரவுக் கூடியது என கண்டறிய கூறப்பட்டது.

2019-ல் சீனாவில் நடைபெற்ற ராணுவ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த பல்வேறு நாடுகளின் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிக்க சாதாரண மருத்துவர்கள் அனுப்பப்படாமல் வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும், வீரர்களுக்கு கொரோனா வைரசை பரப்பவே அவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம்” என சாவோ ஷாவோ மேலும் தெரிவித்துள்ளார்.

சீன ஆராய்ச்சியாளரின் இந்த பேட்டி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading