Local

கொரோனா தொற்றால் மேலும் 183 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் (21) மேலும் 183 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

107 ஆண்களும் 76 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 136 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 45 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குட்பட்ட இருவர் மரணித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,366 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 3,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 388,806 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 39,661 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading