Local

கொரோனா தொற்று ஏற்பட்டால் 10வருட ஆயுட்காலம் குறையக்கூடும்!

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களின் ஆயுட்காலத்தில் 10 வருடங்கள் குறைய கூடும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் Dr.ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானால் அவர்களின் ஆயுள் காலம் 10 வருடங்கள் குறையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 60 வயது கடந்தவர்கள் கொரோனா தொற் றினால் உயிரிழப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் உயிரிழப்பதற்குக் கவனக்குறைவே முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading