Local

டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்படும் அபாயம்!

மனிதர்கள் பயன்படுத்திய கழிவு நீர் கடலில் கலப்பதால் டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி கனடாவிலுள்ள டல்ஹௌசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடல் பாலூட்டிகளில் நடத்திய ஆய்வில், ”கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய நீர் கடலில் கலப்பதால் கடல் பாலூட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த ஆய்வில் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸ் கோவி 2 (SARS-CoV-2)என்ற வைரஸால் கடல் பாலூட்டிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வகையில் இக் கொரோனாத் தொற்றானது டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading