Local

கொரோனா தொற்று பதிவாகும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 100வது இடம்!

உலக தொற்று பதிவாகும் நாடுகள் பட்டியலில் இலங்கை 100ஆவது இடத்தில் உள்ளது.

உலக கொரோனா தொற்று தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய, ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 146ஆவது இடத்தில் இலங்கை இருந்தது.

எனினும், மினுங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் மற்றும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இன்றைய தினம் புதிதாக பதிவான 544 கொரோனா தொற்றாளர்களுடன் இலங்கை 100ஆவது இடத்தை நோக்கி பின்தள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading