Features

கொரோனா நோயாளிகள் AC அறைகளில் இருக்கலாமா?

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்கள் ஏசி அறைகளில் இருக்கலாமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் கொரோனாவில் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பலரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த வெயில் காலங்களில் வெப்பத்தினை சமாளிப்பதற்கு ஏசி அறைகளைப் பயன்படுத்தலாமா என்பது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.

பொது இடங்கள், ஹொட்டல், கடைகள் என்று ஏசி அறைகளில் வாடிக்கையாளர்கள் பலரும் வந்து செல்வர். இதனால் கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மிகவும் எளிதாக தொற்றிக்கொள்ளும்.

ஆதலால் இந்த கொரோனா காலங்களில் பொது இடங்களில் ஏசி அறைகளை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

பொதுவாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த காற்றோட்டம் உடைய அறைகள் முக்கியம். எனவே, முடிந்தவரை ஜன்னல்களைத் திறந்து வைப்பதன் மூலம் அறைகளில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல பசுமையான காட்சிகள் மன ரீதியாகவும் கொரோனா நோயாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதேநேரம் வீடுகளில் இருப்பவர்கள் விண்டோ ஏசிக்களை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வீடுகளில் இருப்பார்கள் என்பதால், அவர்களின் சுவாசக் காற்றே ஏசிக்கள் மூலம் சுற்றி வரும். இதனால் வீடுகளில் கொரோனா நோயாளி மட்டும் இருந்தால், ஏசிக்களை பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading