கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு 6 மாதங்கள் வரை அதன் பாதிப்பு காணப்படும்!

கொவிட் தொற்றிலிருந்து குணப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கு ஆறு மாதங்கள் வரை இந்நிலை காணப்படலாம் என்றும் நான்கு வாரங்களுக்குப் பிறகு கொவிட் நோய்க்குள்ளாகலாம் என்றும் கொழும்பு காசல் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் சரத் லன்ரோல் கூறியுள்ளார்.
இது மூச்சுத்திணறல், தசை வலி, சோர்வு மற்றும் முழங்கால் வலியை ஏற்படுத்தும் என அவர் மேலும் கூறினார். ஆனால் இது ஒரு தீவிரமான நிலை இல்லை என்றாலும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரைப் பார்ப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இலங்கையிலுள்ள 2 லட்சம் கர்ப்பிணித் தாய்மாரில் 90 சதவீதமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் கொவிட் தொற்றால் உயிரிழந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
