World

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கை செய்ய முடியாமல் திணறும் சீனா!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றி, உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வைரஸ் தோன்றிய சீனாவில் மீண்டும் அது பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக அங்கு ஒமைக்ரான் வகை வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கசீன அரசு பொது முடக்கம், போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அமல் செய்தது. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கொரோனா தொற்று கெடுபிடிகளை அரசு தளர்த்தியுள்ளது.

இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா அதிகரித்துள்ளது. 2.2 கோடி மக்கள் வசிக்கும் இந்த நகரில் கொரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இதனால் இறுதிச் சடங்கு செய்யும் சேவை நிறுவனங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஊழியர் பற்றாக்குறையால் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவதிலும், சடலங்களை தகனம் செய்வதிலும் சீன அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அகற்றுவதில் கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்கைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. இதுகுறித்து மியூன் ஃபியூனரல் ஹோம் எனப்படும் இறுதிச் சடங்கு சேவை நிறுவன ஊழியர் கூறும்போது, “சடலங்களை எடுத்துச் செல்ல எங்களிடம் சில கார்கள் மட்டுமே உள்ளன. மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. பல ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். அதனால் சடலங்களை அகற்றுவதில் சிரமம் உள்ளது” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading