World

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது பாகிஸ்தான்!

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது பாகிஸ்தான். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,246 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 3.86 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். வைரசின் ஆரம்பப் புள்ளி சீனாவாக இருந்தாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சீனாவை காட்டிலும் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது அந்த வரிசையில் பாகிஸ்தானும் சேர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 4,688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 85,246 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், சீனாவை (84,160 பேர்) பாகிஸ்தான் முந்தியுள்ளது.
இதற்கிடையே, கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வுகான் நகரில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதேபோல, ரஷ்ய எல்லையை ஒட்டி உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் முடான்ஜியாங் நகரிலும் முழு பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கு ெதாடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading