Uncategorized

கொரோனா பாதிப்பு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனோ வைரஸ் உலக நாடுகளையும், மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய்க்கு இதுவரை எந்தவித மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு நாடுகள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சர்வதேச ரீதியில் அதிகளவான கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவில் 6,460,250 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அங்கு 193,250 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் இதுவரையில் 71,687 பேர் குறித்த வைரஸ் தொற்று காரணமாக பரிதாபமாக பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 94 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

சர்வதே ரீதியில் கொவிட் 19 பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு இதுவரையில் 126,686 பேர் மரணித்துள்ளனர்.

இதுவரை 12 மரணங்கள் ஏற்பட்டுள்ள இலங்கை இந்தப் பட்டியலில் 128வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் இதோ..!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading