Local

கொரோனா பாதிப்பு 14 கோடி! உயிரிழப்பு 30 இலட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,011,501 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 140,504,994 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 119,326,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,696 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கூட, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 140,504,994 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 119,326,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30 லட்சத்து 11 ஆயிரத்து 501 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 18,167,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 107,021 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading