Local

கொரோனா வைரஸை முதலில் கண்டுபிடித்த வைத்திருக்கும் கொரோனா வைரஸ்!

சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர் லி வென்லியாங் ( Li Wenliang ) . 34 வயதுடைய இவர் கடந்த வருடம் December மாதம் 30ம் திகதி கடல் உணவுகள் விற்பனை செய்து வரும் 7 பேருக்கு புதிய வகை வைரஸ் தாக்குதல் இருப்பதாகவும், அதன் பெயர் கொரோனோ வைரஸ் என்றும் வீ சட் ( WeChat) சமுக வலைத்தளம் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அந்த செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி சீனா அரசாங்கத்தின் கவனத்தை எட்டியது. ஆனால், அதனை நிராகரித்த சீன அதிகாரிகள் அவர் வதந்தியைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள்.
அதன் பிறகு சில நாட்களிலேயே வைத்தியர் லி வென்லியாங் கூறியதை போல கொரோனோ வைரஸ் சீனாவை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், வைரஸ் பாதிப்பிலிருக்கும் நோயாளியைப் பரிசோதித்ததால் லி வென்லியாங்கும் இப்போது கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறிய உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கொரோனோ வைரஸ் தாக்குதலிலிருந்து பல மக்கள் காப்பற்றப்பட்டிருக்கலாம் என்று சீன மக்கள் இப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading