Cinema

கொரோனா வைரஸ் தொற்றுடன் நூறு பேருக்கு விருந்து கொடுத்த பாடகி

லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திருப்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். கனிகா கபூர் லக்னோ விமான நிலையம் வந்திறங்கியதும் அதிகாரிகளின் கொரோனா சோதனையில் இருந்து எப்படி தப்பினர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரண்டு வாரங்கள் தனிமை படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க கனிகா கபூர் ஏதோ ஒரு வழியில் தப்பியுள்ளார். தான் லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். அந்த பார்ட்டியில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 100 பிரபலங்கள் வரை அந்த பார்ட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கனிகா கபூர் ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவர் இதை மறைத்ததால் அந்த அபார்ட்மென்டில் வசித்து வரும் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் அந்த கட்டிடம் முழுவதையும் தனிமைபடுத்தவுள்ளனர். மற்றவர்களின் வாழ்க்கையை இப்படி கேள்விக்குறியாக்கியுள்ள கனிகா கபூருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading