Local

கொழுப்பு மாநகர சபைக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஆணையாளருக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக கொழும்பு மாநகர சபை, நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நகர மக்களுக்கான நிவாரண விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மாநகர முதல்வர், சபை உறுப்பினர்கள் மற்றும் ஆணையாளரை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல், உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் அதிகாரிகளின் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading