Cinema

விவகாரத்து குறித்து முதன் முறையாக பேசிய நடிகை சமந்தா!

பிரபல திரைப்பட நடிகையான சமந்தா விவாகரத்து குறித்து முதன் முறையாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இவர்களின் அறிவிப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் இது குறித்து சமந்தா அதன் பின் எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் சில நிமிடங்களுக்கு முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விவாகரத்து என்பது மிகப் பெரிய வலி என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.    

மேலும், என்னுடைய விவாகரத்து செய்தி மற்றும் தன்னைப் பற்றி வரும் வதந்திகள் போன்றவைகளை கேட்டு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், அதில் இருந்து தன்னை பாதுகாத்தவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் பட வாய்ப்பிற்காகவும், சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும், மற்றும் ஒரு சில விஷயங்களுக்காகவும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை, கருகலைத்துவிட்டேன் என்றெல்லாம் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், விவாகரத்து என்பது எவ்வளவு பெரிய வலி என்பது தெரியுமா? அதிலிருந்து மீள நேரம் கொடுங்கள். என்னை பற்றிய வதந்திகள் இடைவிடாமல் வந்துகொண்டிருக்கும். உறுதியாக கூறுகிறேன் அவர்கள் கூறுவது ஒருபோதும் என்னை உடைக்காது.

சில தனிப்பட்ட காரணங்களினாலும், இது போன்ற விஷயங்கள் பேசப்படுகிறது என உருக்கமாக கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading