Local

கொழும்பில் உள்ள அரச அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஆபத்து!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள் பாரியளவில் பாழடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வீட்டுத் தொகுதிகளை இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்மா மாவத்தை வீடமைப்புத் திட்டம், கந்தேபுர அடுக்குமாடித் திட்டம், B36 மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டம், ஜி. எச். ஜே. கே. எம். மற்றும் என். மிஹிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இவ்வாறான நிலையில் காணப்படுகின்றன.

இந்த வீட்டுத் தொகுதிகளை இடித்துத் தள்ளுமாறு வீடமைப்பு அமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading