Local

கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நகரத்தில் ஒரு நரக நெருப்பு!

கொழும்பு – தாமரை கோபுரத்திற்கு அருகில் இன்று நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ள பெயர் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கு ‘ஹெல்ஃபயர் (Hellfire) என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு கொழும்பு மாநகர சபை அனுமதி வழங்கியுள்ள போதிலும் ‘ஹெல்ஃபயர் என்ற பெயரைக் காட்சிப்படுத்த வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

எனவே அந்த நிகழ்வின் பெயரை மாற்றுமாறு அவர் ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

இந்த பெயருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாகவும் தமது நகரத்தில் ஒரு நரக நெருப்பு கச்சேரியை தாம் பார்க்க விரும்பவில்லை என்று அவர் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த நிகழ்வில் ‘ஹெல்ஃபயர் என்ற பெயர் விளம்பரப்படுத்தப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே அதனை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநரக முதல்வர்  மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading