Local

கொழும்பில் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்

கொழும்பு 5, நாரஹேன்பிட்டி-தாபரே மாவத்தை பகுதி கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து, முடக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே, குறித்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் சுத்திகரிப்பு பணியாளரான ஹெவ்லொக் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று இனங்காணப்பட்டுள்ளார்.

மேலும் டொரிங்டன், பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த லொறி சாரதி ஒருவரும் கொரோனா தொற்றுடன் இனம்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading