Local

கொழும்பில் தீ விபத்து 21 வீடுகள் எரிந்து நாசம்!

கொழும்பு 14, கஜிமாவத்த பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கஜிமாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பின்னர் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதுடன், தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading