Local

கொழும்பில் பதற்றம்  ஜனாதிபதி செயலகம் இராணுவ கட்டுப்பாட்டில்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் ஆயிர கணக்கானோர் திடீரென நுழைந்துள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும்,இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நிலவியுள்ளதுடன்,போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading