Local

கொழும்புக்கும் பைசர் தடுப்பூசி செலுத்த வேண்டும் இல்லையேல் ஆர்ப்பாட்டம்?

கொழும்பு மாவட்டத்துக்கு பைசர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் இதனை தவிர்க்கும் பட்சத்தில் ஆர்ப்பாட்டத்தில் குதிப்போம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 முதல் 30 வயதிற்கு இடைப் பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படு வதைப் போன்றே கொழும்பு மாவட்டத்திலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால், கொழும்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அரசாங்கம் வலுவாக தூண்டுவதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டைப் பகுதியில் துறைமுகம் அமைந்துள்ளமையால் பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளமையால் இந்த நாட்டில் பிரதான துறைமுகம் அமைந்துள்ளதாலும் அதிக மக்கள் செறிந்து வாழும் மாவட்டம் என்பதாலும் கொழும்பு மாவட்டத்துக்கு பைசர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading