Local

கொழும்பு கிராண்ட்பாஸ் பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்போருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை

கொழும்பு – கிராண்ட்பாஸ், பண்டாரநாயக்க மாவத்தை, 146 ஆம் இலக்க தோட்டத்தில் வசிக்கும் 110 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 07 பேர் அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீடுகளை அண்மித்தவர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அந்த பகுதியிலுள்ள சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அங்குள்ளவர்களுக்கு PCR பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ், பண்டாரநாயக்க மாவத்தை தனிமைப்படுத்தும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading