Local

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சேவைகளை மட்டுப்படுத்த ஆலோசனை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியால், சம்பந்தப்பட்ட பிரதானிக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நாடுமுழுவதிலும் உள்ள பல வைத்தியசாலைகளில், புற்றுநோய், இருதய, மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள், தற்போது பெருமளவில் முடிவடைந்துள்ளதாக, அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் தெரிவத்துள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள், மேலும் பல மருந்துகள் தீர்ந்துபோகும் என அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading