Local

கொழும்பு நட்சத்திர ஓட்டல்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

ஹில்டன் கொழும்பு விருந்தகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று தொடர்பில் நேர்மறை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த விருந்தகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று தொடக்கம் விருந்தகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக மேலதிக தகவல்களை தற்போது வௌியிட முடியாதுள்ளதாக விருந்தகத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த முழமையான அறிக்கையொன்றை விரைவில் வௌியிட எதிர்பார்த்துள்ளது.

விருந்தகம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருந்து COVID-19 தொற்றாளி கண்டுபிடிக்கப்பட்டார், ஆனால் அது ஹில்டல் விருந்தகத்தின் வளாகத்திலிருந்து வந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேவேளை, கொழும்பில் அமைந்துள்ள கோல் பேஸ் விருந்தகத்தின் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

விருந்தகத்தின் பணிகளை அனைத்தையும் நிறுத்த வேண்டும் என சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ள நிலையில், அனைத்து ஊழியர்களும் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஷங்ரிலா விருந்தகத்தின் நடக்க திட்டமிடப்பட்ட சில முக்கிய நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் இது கொவிட் 19 நேர்மறை நோயாளியைக் கண்டுபிடிப்பதற்கா அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்குமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், ஷங்ரிலா விருந்தகத்திலும் ஒரு கொவிட் 19 தொற்றாளி கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த விருந்தகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading