Local

கொழும்பு பங்குச் சந்தை சாதனை!

கொழும்பு பங்குச் சந்தை இன்று (21) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் 16,500 புள்ளிகளைத் தாண்டியது, மேலும் S&P SL20 பங்கு விலைச் சுட்டெண் முதல் முறையாக 5,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

நாள் முழுவதும் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 224.01 புள்ளிகள் உயர்ந்து 16,597.16 புள்ளிகளில் நிறைவடைந்த அதே வேளையில், S&P SL20 விலைச் சுட்டெண் 94.71 புள்ளிகள் உயர்ந்து 5,056.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.31 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading