Local

கொழும்பு மக்களை அச்சுறுத்தும் புதிய கொரோனா உப திரிபு!

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும், ஆபத்தான கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுவதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

24 கொரோனா நோயாளர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 20 மாதிரிகளில், இந்தப் புதிய உப திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்தப் பிரின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

டீயு-5 என்ற கொரோனா உப திரிபானது, கொழும்பில் வேகமாக பரவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மேலும் சில கொரோனா நோயாளர்களின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

குறித்த வைரஸ் தொடர்பான புதிய தகவல்களை அதன் பின்னர் கண்டறிய முடியும் என விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading