Local

கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்ட வேளையில் ஈடுபட்டிருந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ்?

கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்ட வேளையில் கடமையில் ஈடுபட்டிருந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நிலையில் முடக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் மனநிலையை மாற்றுவதற்காக இராணுவத்தினராலும் கடற்படையினராலும் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட படையினர் பலருக்கும் கொரோனா ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது பொலிஸாரில் சிலருக்கு கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்திஉ 10 தொடக்கம் 15 வரையான அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading