Local

கொழும்பு வெள்ளவத்தையில் அதிகரிக்கும் கொரோனா!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பெருமாளவான கோவிட் தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீபிரதாபன் இதனை தெரிவித்துள்ளார்.  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி சுகாதார பிரிவில் நாளாந்தம் நடத்தப்படும் கோவிட் பரிசோதனைகளில் சுமார் 30 தொடக்கம் 40 வீதமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, வெள்ளவத்தை பகுதியில் பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் சுமார் 100ற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரகும்பா பகுதியில் மாத்திரமே கொத்தணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனினும், வெள்ளவத்தை பகுதியில் வேறு எந்தவொரு இடத்திலும் இவ்வாறான கொத்தணி உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading