Local

கொவிட் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தனிப்பட்ட பிரசவ அறைகள்!

கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக பல வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது

அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 3,800 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதுடன், அவர்களில் 850 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், சில கர்ப்பிணித் தாய்மார்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading