Local

கொவிட் சடலத்துடன் சென்ற வேன் விபத்து பொலிஸ் அதிகாரி பலி அறுவர் காயம்!

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05.06.2021) காலை 7.30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதற்குப் பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள், வாகன சாரதி, சடலத்தின் உறவினர் என ஆறு பேர் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading