Local

கோடிக்கணக்கான நஷ்டத்தை எதிர்நோக்கும் விமான நிறுவனங்கள்

உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக விமானப் போக்குவரத்து மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் விமான நிறுவனங்கள் மிகப்பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றது.

கொரோனா பாதித்த நாடுகள் பெரும்பாலும் தமது விமான நிலையங்களை மூடியும் மட்டுப்படுத்தியும் வருகின்றது. ஏனைய நாடுகள் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளுக்கான பயணங்களை தவிர்க்குமாறு தமது மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்த வகையில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு 21 ஆயிரம் (இந்திய மதிப்பில்) கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சர்வதேச விமான நிலைய கவுனிசில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading