Local

கோட்டா இலங்கைக்கு வர உரிமை உண்டு என மொட்டு கட்சி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் வருவதற்கு சகல உரிமைகளும் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு கோட்டபாய திரும்பி வரும் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது சமகால அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கை குடிமகன், அதுமட்டுமல்ல நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி. அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர் அரசியலில் தொடர விரும்பினால் அதனை வரவேற்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. சூழ்ச்சிக்காரர்களே, தலைமைப்பதவியில் மாற்றம் கோருகின்றனர் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காரியவசம் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading