Local

கோட்டா எங்கே? கைது செய்ய கோரிக்கை!

ஜனாதிபதி கோட்டா இன்னமும் சிங்கப்பூர் செல்லவில்லை.. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இன்னமும் மாலைதீவில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன..

பாதுகாப்பாக செல்லும் ஏற்பாடுகள் தாமதமடைந்ததால் , சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தை அவர் மிஸ் செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது..

மாலைதீவு அதிகாரிகள் இமிக்ரேஷனுக்காக இவரின் அறைக்கு செல்ல மறுத்துள்ளதால் , அவர் மக்களோடு மக்களாக லைனில் சிங்கப்பூர் இமிக்ரேஷனுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று இப்போது தனி ஜெட் விமானமொன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்.

இதேவேளை , கோட்டாவுக்கு கைது செய்யக் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க பிரித்தானிய அரசாங்கம் அதன் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமோக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டபாய பிரித்தானியா செல்ல ஏற்பாடுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்றும் கிடைக்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading