Local

கோதுமை மாவுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!

கோதுமை மா இறக்குமதி அனுமதி முறை நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன், கோதுமை தானியங்களுக்கு 06 ரூபா வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், இறக்குமதி கட்டுப்பாட்டை மாத்திரமே எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading