Local

கோத்தபாய தன்னை அச்சுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு!

இரசாயன பசளை தடைக்கு எதிராக கருத்து வெளியிட்டால் அமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்ரசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டில் உள்ள வைத்தியர்கள் தவறான ஆலோசனைகளை வழங்கினர். இராசயன பசளை பயன்பாடு காரணமாக சிறுநீரக நோய் ஏற்படுவதாகவும் இதன்காரணமாக சேதன பசளையை பயன்படுத்துமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினர்.

இது தொடர்பாக தாம் வழங்கிய ஆலோசனைகளை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பசளை தொடர்பில் கருத்து வெளியிட்டால் அமைச்சு பதவியில் இருந்தும் தம்மை நீக்குவதாகவும் அவர் அச்சுறுத்தல் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்ரசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading