World

கோயிலுக்குள் அரை நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம் மீட்பு!

கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.. அந்த சடலம் அரை நிர்வாணமாக இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
லாக்டவுனில் இருந்தாலும், குற்ற செயல்கள் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.. ஊரடங்கிலும் வன்முறைகளும், அதன் எண்ணிக்கையும் குறையவில்லை… குறிப்பாக பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான அநீதிகள் பெருகி வருகி்றன.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திட்டக்குடி அடுத்துள்ள பகுதியில் மேலகல்பூண்டி அய்யனார் என்ற கோவில் உள்ளது.. சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கோயில் கொஞ்சம் பிரபலமானது.

இந்த கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதையடுத்து போலீசாரும் அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.. அவருக்கு 45 வயதிருக்கும்.. அரை நிர்வாணமாக அந்த பெண் இருந்துள்ளார்.. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading