Local

சகோதரருக்கு ஆதரவாக ஓடிய 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாகல, குடாஹெட்டாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் மரதன் ஓட்ட வீரர்களுக்கு ஆதரவாக வீதியில் ஓடிய 10 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (22) காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தனது மூத்த சகோதரருக்கு ஆதரவாக ஓடிய வேளையில் சிறுவன் வீதியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக கலாவெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், பிரேத பரிசோதனை கெக்கிராவ வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading