Sports

சச்சினின் 17 ஆண்டுகள் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டது. எஞ்சிய கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதில், கேப்டன் கோலி 23 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் 17 ஆண்டுகளாக இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளர்.

வெறும் 251 இன்னிங்சில் விராட் கோலி 12 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, சச்சின் டெண்டுல்கர் (300), ரிக்கி பாண்டிங் (314), சங்கக்காரா (336), ஜெயசூர்யா (379) ஆகியோர் உள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading