Sports

சச்சின் டெண்டுல்கர் நம்பி ரூ. 5 கோடி முதலீடு செய்த நிறுவனம்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) முதலீடு செய்திருந்த நிறுவனம் ஒன்று இப்போது அவருக்கு 360 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஆசாத் இன்ஜினியரிங் லிமிடெட் (Azad Engineering Limited) அடுத்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது. அப்போது, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 9 மாதங்களில் மிகப்பாரிய லாபத்தை பெறுவார்.

டெண்டுல்கரின் ரூ. 5 கோடி முதலீடு செய்திருந்தார். அது இப்போது ரூ.22.96 கோடியாக வளர்ந்துள்ளது. இது அவரது முதலீட்டில் 360 சதவீதம் லாபம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்டியல் விலையைப் பொறுத்து வருமானம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் IPO டிசம்பர் 23 அன்று சாம்பல் சந்தையில் 65.84% அதாவது ஒரு பங்குக்கு ரூ.345 என்ற பிரீமியத்தை எட்டியுள்ளது.

Sachin Tendulkar, PV Sindhu, Saina Nehwal, VVS Laxman, Sachin Tendulkar invested company, Azad Engineering Limited, Azad Engineering Limited IPO, Initial public offering, ரூ.5 கோடி முதலீடு செய்த சச்சின் டெண்டுல்கர்., ரூ.23 கோடியாக திரும்பி வரும் லாபம்

நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் பட்டியலிடப்பட்டால், முதலீட்டாளர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள்.

2023 மார்ச் 6 அன்று, டெண்டுல்கர் ஒரு பங்குக்கு ரூ.114.1 என்ற விகிதத்தில் நிறுவனத்தின் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கினார்.

தற்போது அவர் நிறுவனத்தின் 438,210 பங்குகளை வைத்துள்ளார். ஆசாத் இன்ஜினியரிங் ஒரு clean energy, விண்வெளி பாகங்கள் மற்றும் turbines உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

Sachin Tendulkar, PV Sindhu, Saina Nehwal, VVS Laxman, Sachin Tendulkar invested company, Azad Engineering Limited, Azad Engineering Limited IPO, Initial public offering, ரூ.5 கோடி முதலீடு செய்த சச்சின் டெண்டுல்கர்., ரூ.23 கோடியாக திரும்பி வரும் லாபம்

சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி PV Sindhu, Saina Nehwal, VVS Laxman ஆகிய மூன்று விளையாட்டு வீரர்களும் ஆசாத் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

டெண்டுல்கர் முதலீடு செய்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்த மூன்று வீரர்களும் தலா ரூ.1 கோடி முதலீடு செய்திருந்தனர்.

இருப்பினும், அவர்கள் சச்சினை விட அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்கினர். மூன்று வீரர்களும் பங்குகளை தலா ரூ.228.17க்கு வாங்கியிருந்தனர்.

இப்போது பி.வி.சிந்து, சாய்னா நேவால், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரின் ரூ.1 கோடி முதலீடு 130% அதிகரித்து ரூ.2.3 கோடியாக இருக்கலாம்.

Sachin Tendulkar, PV Sindhu, Saina Nehwal, VVS Laxman, Sachin Tendulkar invested company, Azad Engineering Limited, Azad Engineering Limited IPO, Initial public offering, ரூ.5 கோடி முதலீடு செய்த சச்சின் டெண்டுல்கர்., ரூ.23 கோடியாக திரும்பி வரும் லாபம்

ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் ஐபிஓ டிசம்பர் 20 முதல் 22 வரை திறந்திருந்தது. இந்நிறுவனத்தின் பங்குகள் டிசம்பர் 26ஆம் திகதி முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு, டிசம்பர் 28ஆம் திகதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

நிறுவனம் இந்த ஐபிஓவை ரூ.740 கோடி திரட்டுவதற்காக கொண்டு வந்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 83.04 மடங்கு சந்தா பெற்றுள்ளது.

ஒரு நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பொதுமக்களுக்கு வழங்கும்போது, ​​அது IPO எனப்படும், அதாவது Initial public offering. நிறுவனங்கள் தங்கள் வணிகத்திற்கு நிதி தேவைப்படும்போது, ​​அவர்கள் தங்கள் பங்குகளை விற்று, பங்குச் சந்தையில் தங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading