World

இஸ்ரேலிய வீரர்களை கொன்று குவித்த ஹமாஸ்! தீவிரமடையும் போர்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஹமாஸ் போராளி படை குழுவினருக்கும் இடையிலான சண்டை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேலிய இராணுவ படை காசாவில் தரைவழி தாக்குதலை முன்னகர்த்தி வருகிறது.

இதில் அதிகளவிலான ஹமாஸ் போராளி குழுவினர் கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்றனர்.

அதே சமயம் ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய வீரர்களை ஆங்காங்கே தாக்கி வருகின்றனர்.

hamas girls army isral

அந்த வகையில் காசாவில் தற்போது 8 இஸ்ரேலிய வீரர்கள் ஹமாஸ் படையினர் உடனான சண்டையின் போது கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, இதுவரை 154 இஸ்ரேலிய வீரர்கள் ஒக்டோபர் 20ம் திகதி தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கிய பிறகு கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

hamas girls army

ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருந்து இதுவரை 480 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading