சஜித்தின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக, உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், தேசிய அமைப்பாளர் ஆகியோரும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
