Local

சட்டரீதியற்ற அரசை மட்டும் எதிர்ப்போம்! – ஆனால் எந்த அரசுடனும் கூட்டமைப்பு இணையாது என்கிறார் சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசை அகற்றுவதற்காக வாக்களித்தாலும், எந்தவொரு அரசிலும் இடம்பெறாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

“சட்டரீதியற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு என்பதால், தற்போதைய அரசுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்தது. ஆனால், எந்தவொரு கூட்டணியிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேராது. அது தமிழ்க் கட்சிகளுடன் தனியான கூட்டணியை வைத்திருக்கின்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.தே.க. தலைமையிலான கூட்டணியில் கூட்டமைப்பு இணைந்து கொள்ளுமா என்று ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading