Local

சந்திரிக்காவின் மனதை கொள்ளை கொண்ட விஜய்

தமிழக சட்ட சபைத் தேர்தலில் முதலமைச்சராக தெரிவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யிற்கு, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயற்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேர்தலில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவை இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நினைவு கூர்ந்துள்ளார்.

நீண்டகால நட்பு

புதிய ஆட்சியின் கீழ் அந்த உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவின் மனதை கொள்ளை கொண்ட தவெக விஜய் | Chanrika Wishes Tvk Chief Vijay

விஜய்யின் எதிர்காலப் பணிகளுக்குத் தேவையான பலமும் வெற்றியும் கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading